அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை அனர்த்த
நிவாரண குழு,
ஜெ ஜெ பெளன்டேசன் மற்றும் எக்லட் யுனைட்ஸ் ஸ்ரீ லங்கா அமைப்புக்கள் இணைந்து நாவலபிட்டிய,
கம்பளை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அனர்த்தம் நடைபெற்ற அடுத்த நாள் முதல் கட்டம் கட்டமாக திட்டமிட்டு ப முறையாக செயற்படுத்தப்படுகிறது.
அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை தேசியத்தலைவர் சஹீட் எம் ரிஸ்மி மற்றும் ஜெ ஜெ பவுண்டேசன் தலைவர் ஹனீப் ஹாஜி ஆகியோரின் நெறிப்படுத்தலில் கண்டி மாவட்ட பணிப்பாளர் இஃதிசாம் முஹம்மதின் தலைமையில் இளைஞர்,யுவதிகள் சர்வகலாசாலை பட்டதாரி மாணவிகள் பங்களிப்புகள் அளப்பரியது.
07.08.2022 ஐந்து கட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளன.
முதற்கட்டமாக 02.08.2022 ம் திகதி நாவலப்பிட்டிய லபுல் கொட்டுவயில் உள்ள மக்களுக்கான உணவு ,உடை ஏற்பாடுகள் உலர் உணவு, மருந்து ஐபொருட்கள் வழங்கும் வேளைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
இரண்டாம் கட்டமாக 03.08.2022 ம் திகதி கம்பளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு பொதிகள், மருந்து பொருட்கள் வழங்கும் வேலைத்திட்டம் கம்பளை சிரேஷ்ட பொலீஸ் பரிசோதகரின் பொறுப்பில் வழங்கி வைக்கப்பட்டது
மூன்றாம் கட்டமாக 04.08.2022 ம் திகதி லபுல் கொட்டுவ மற்றும் சேலம் பிரிஜ் மக்களுக்கான ஆடை மற்றும் படுக்கைக்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் சுத்திகரிக்கும் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
05.08.2022 ம் திகதி 4வது கட்டமாக மஹகுபுர பேய்லி ரோட் மற்றும் லபுல் கொட்டுவ பகுதி மக்களுக்கு ஆடைகள் மற்றும் படுக்கை ஏற்பாடுகள் குடிநீர் ஏற்படுகளையும் செய்து கொடுக்கப்பட்டது.
ஐந்தாவது காட்டமாக 07.08.2022 ம் திகதி நாவலப்பிடிய பிரதேச சபையுடன் இணைந்து 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு தேவையான முதலுதவி பெட்டிகள் மற்றும் அத்தியாவசிய மருந்து வகைகள் வழங்கும் வேளைதிட்டம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் தலைமையில் நாவலப்பிட்டிய பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இறுதியாக காட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், சீருடை மற்றும் வீட்டு உபகரணங்கள் படுக்கை மெத்தை ஆகியவற்றை வழங்கி வைப்பதற்கான் ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறன...
மேலும் சர்வகலாசாலை பட்டதாரி மாணவர்களள் ஊடாக சேதமான ஆவணங்கள் அதேபோன்று சகல தகவல்களையும் சேகரித்து ஆவணப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






















No comments:
Post a Comment