Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் ; அம்பாறை பிரபல ஊடகவியலாளர் எஸ். எல். எம். பிக்கீர் காலமானார்.

Saturday, 20 August 2022


.பி.எம்.அஸ்ஹர்
இறக்காமத்தைச்சேர்ந்த பிரபல ஊடகவியலாளர்
எஸ். எல். எம். பிக்கீர் தனது 59 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.


கடந்த சில நாட்களாக சுகயீனமுற்று அம்பாரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் காலமானார்.
அம்பாரை மாவட்டத்திலுள்ள மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவரான இவர் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களில் பிராந்திய நிருபராகச் சேவையாற்றியுள்ளார்.


தொழில் ரீதியில் ஓர் ஆசிரியரான இவர் மரணிக்கும் போது இறக்காமம் அல் மதீனா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றி வந்தார்.ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினராகவும் சப்மா ஸ்ரீ லங்காவின் உறுப்பினராகவும் செயற்பட்டு வந்த இவர் அம்பாரை மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊடக அமைப்புக்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.


அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய இவர் மரணிக்கும் போது அதன் பிரதிதித்தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.


சிங்கள மொழியில் ஆற்றல் கொண்ட இவர் சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகளுடனும் ஊடகவியலாளர்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வந்தார் இவர் இனக்கலவரங்களின் போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வந்தவர்
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவரது ஜனாஸா இன்று இறக்காமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவுள்ளது




No comments:

Post a Comment