Recent Posts

Search This Blog

பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம்.

Sunday, 21 August 2022


ஹஸ்பர்_

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் என கோரி வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை (21) திருகோணமலை 3ம் கட்டை பிள்ளையார் கோயிலுக்கு முன் நடத்தியது .

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது இவர்களினால் மகஜர் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது .இம் மகஜரில் இலங்கையின் வடக்கு கிழக்கை சார்ந்த மனித உரிமை பாதுகாவலர்கள் சிவில் அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள் ஒன்றினைந்து மேதகு ஜனாதிபதியான தங்களிடம் 18 ஆவணி 2022 அன்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவர் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சார்ந்த எமது பகிரங்க கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகியன அரசியல் அமைப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளாகும் .இந்த உரிமைகளை பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும் தமது கோரிக்கைகளை தமது நாட்டிர் சகல பிரஜைகளுக்கும் அரசாங்கத்துக்கும் வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தினர்.
அவர்கள் வன்முறையில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை தொழிற் சங்க நடவடிக்கைகளும் வெகுஜன போராட்டங்களும் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல மாணவ செயயற்பாட்டாளர்கள் பயங்கரவாதம் சம்மந்தப்பட்ட எவ் வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.
எனவே பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் என கோருகின்றோம்
இலங்கையில் ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சராவார் அவ்வகையில் எவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு .
எனவே தங்களின் மேலான அதிகாரத்தை பயன்படுத்தி மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான தடுப்பு காவல் கட்டளை பத்திரத்தில் கைச்சாத்திட வேண்டாம் என கூறுகின்றோம்
இலங்கையில் வடகிழக்கு சார்ந்த சிறுபான்மை தமிழர்களான நாம் தற்போதும் கொடூரமான பயங்கரவாத தடை சட்டத்தின் மனிதத் தன்மையற்ற துன்புறுத்தலை இன்று வரை அனுபவித்து வருவதோடு அச் சட்டத்தின் காட்டுமிராண்டித்தனமான சுபாவத்தினை நேரடியாக எதிர் கொண்ட அனுபவங்களும் எமக்கு உண்டு .
பதின்ம வயதில் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் 30 தொடக்கம் 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்து வருகின்றனர்.சிலர் வெளிச்சத்தை காணாது சிறைக்குள்ளேயே மாண்டு போயினர்
இலங்கையின் சிறுபான்மை மக்களான எம்மை பொறுத்த வரையில் இந்த நாட்டில் யாரும் இனிமேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படக் கூடாது அறவழிப்போராட்டக்காரர்கள் அனைவரையும் உடன் விடுவிக்குமாறு கோருகின்றோம் என ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment