Recent Posts

Search This Blog

ஐரோப்பிய நாட்டுக்குள் செல்ல முயன்ற இலங்கையர்கள் 10 பேர் கைது.

Tuesday, 16 August 2022


அஸர்பைஜான் நாட்டின் எல்லையில் ஆகஸ்ட் 12 அன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைளின்போது இலங்கையர்கள் 10 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அஜர்பைஜான் நாட்டின் எல்லை சேவை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளின்படி அவர்கள் கடந்த ஜூலை 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சுற்றுலாப் பயணிகளாக நாட்டின் எல்லைக்கு அதிகாரப்பூர்வமாக சென்றுள்ளனர்.

பின்னர், அலிர்சா என்ற ஈரானிய குடிமகனுடன் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் செல்வதற்காக அஸர்பைஜான் எல்லையை கடந்து துருக்கிக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளனர்.

இந்தநிலையில் சட்டவிரோத இடம்பெயர்வுகளின் ஊடுருவலைக் கண்டறியும் வகையில் அவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



No comments:

Post a Comment