Recent Posts

Search This Blog

QR code முறையில் இன்று நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் வழங்கப்படும் இடங்கள்.

Friday, 22 July 2022


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம் இன்று (23) நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பரிசோதிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது நேற்று (22) கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பரீடசார்த்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தேசிய மட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி இன்று தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பின்வருமாறு…




No comments:

Post a Comment