சீனாவிடமிருந்து இலங்கை பல காலகட்டங்களில்
அதி உயர்ந்த வீதத்தில் வட்டிக்கு ஏராளமான கடனை பெற்றுவந்தது. சீனாவின் வங்கிகள் மூலமாகவே இந்த பணம் இலங்கையை வந்தடைந்தது. அதுபோல் சீனாவுக்கு வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டிய பணம் இதே வங்கி மூலமாகவே நடைபெறும்.
அதாவது கொடுக்கள், வாங்கல் நடைபெறுவது வங்கி மூலமாகவே, இதற்காக குறித்த வங்கியுடன் ஒப்பந்தம் செய்வது வழமை.
இவ்வாறு அதிக வட்டிக்கு பெறப்பட்ட பணம், அபிவிருத்தி என்ற போர்வையில் ஊதாரித்தனமாகவும், ஆடம்பரமாகவும் செலவழிக்கப்பட்டது என்பது அனைவரதும் குற்றச்சாட்டாகும். அவ்வாறு செலவழித்தால்தான் தரகுப் பணத்தினை பெற்று கொள்ளையடிக்க முடியும் என்பது நாங்கள் இதுவரையில் நம்பி வந்த விடயமாகும்.
அவ்வாறு பெறப்பட்ட பணங்கள் அபிவிருத்திப் பணிக்காக செலவழிக்கப்படும்போது குறிப்பிட்ட விகிதம் ஆட்சியாளர்களினால் கொள்ளையடிக்கப்படுவது பற்றி மட்டுமே அறிந்துள்ளோம்.
ஆனால் இன்னுமொரு தந்திரோபாயமும் பின்பற்றப்படுவது பற்றி பலரும் அறிந்திருப்பது குறைவு. அதாவது அதிக வட்டிக்கு பணத்தினை வழங்குமாறு நாங்கள்தான் சீன வங்கியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அது ஏன் ?
பத்து வீத வட்டியில் பெறவேண்டிய கடனை பன்னிரெண்டு அல்லது பதினான்கு என்ற அதிக வீதத்தில் பெற்றுக்கொள்வது. பின்பு மாதாந்தம் அல்லது தவணை அடிப்படையில் வங்கிக்கு வட்டியை செலுத்தும்போது பன்னிரெண்டு அல்லது பதினான்கு வீத வட்டியை நாங்கள் செலுத்த வேண்டும்.
பின்பு ஏற்கனவே வங்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தங்களுக்கு உரித்தான வீத வட்டியை பெற்றுவிட்டு மீதம் இரண்டு அல்லது அதற்கு அதிகமான வீதத்தை எமது போக்கட்டுக்கு சீன வங்கி வழங்கும். இதற்காகத்தான் அதிக வட்டிக்கு சீனாவிடமிருந்து கடனை நாங்கள் பெறுகின்றோம்.
இங்கே பத்து அல்லது பன்னிரெண்டு வீதம் என்று குறிப்பிட்டிருப்பது துல்லியமான கணக்கு அல்ல. ஓர் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளேன்.
ஒப்பீட்டளவில் சீனாவை விட சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) மிகக்குறைந்த வட்டுக்கு கடனை பெறலாம். அவ்வாறு பெற்றால் சீன வங்கி மூலமாக செய்வது போன்று டீல் பண்ணவும் முடியாது, பகல் கொள்ளையடிக்கவும் முடியாது.
இது எப்படி கொள்ளை ? நம்புவதற்கு கடினமாக உள்ளதல்லவா ? ஆனால் இதுதான் உண்மை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது



No comments:
Post a Comment