Recent Posts

Search This Blog

அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தில் ஜே.வி.பி.யை சேர்த்துக் கொள்ளாவிட்டால் மீண்டும் இதே போல் மக்கள் புரட்சி ஏற்படும்.

Tuesday, 12 July 2022


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலத்துக்குப்
பதவி வகிக்க மூன்று பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்கனவே தனது பெயரை அறிவித்துள்ளார் மற்றும் ஏனைய குழுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அழகப்பெருமவை நியமிக்கத் திட்டமிட்டுள்ளன.

எனவே இந்த சூழ்நிலையில் அவர்களில் ஒருவர் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படுவார், ”என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது தயாசிறி கூறினார்.

ஆனால் இந்த வேட்பாளர்களில் யாரேனும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ‘கோட்டா கோ கம’ செயற்பாட்டாளர்களின் ஆதரவைப் பெற முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர தெரிவித்தார்.


இரு வேட்பாளர்களையும் நிராகரிக்கும் பட்சத்தில் அடுத்த விருப்பத்தை ஆராய வேண்டும் என்றார்.


“சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குறுகிய காலத்திற்கு பதில் ஜனாதிபதியாக பதவியேற்று நாட்டை நிர்வகிப்பதற்காக பிரதமரை நியமிப்பதே அடுத்த தெரிவாகும். ஜே.வி.பி.யும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக நான் கருதுகிறேன்,” என்றார்.


எம்.பி. ஜயசேகர மேலும் கூறுகையில்,

“அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தில் ஜே.வி.பி.யையும் இணைத்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் மீண்டும் அதே போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும்.


No comments:

Post a Comment