Recent Posts

Search This Blog

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்.

Thursday, 7 July 2022


ஜனனம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில்
வறுமைக் கோட்டின் கீழ் வாழும்
பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான
உலர் உணவுப் பொருட்கள் முதற்கட்டமாக
இன்று கொழுப்பில் வழங்கி வைப்பு…!
———————————————————————-
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார சூழ்நிலை காரணமாக பல்வேறுதரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெண்கள் தலைமைத்துவம் உள்ள குடும்பங்கள் அதிகளவில் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துவருகிறார்கள். அதில் உச்சக்கட்டமாக இப்பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு நேர உணவினை கூட வழங்க முடியாமல் அந்த குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளவும் செய்கிறார்கள்.

இந்த நிலைமையை கருத்தில் எடுத்து கலாநிதி வி ஜனகன் அவர்களின் திட்டமிடல் மற்றும் ஏற்பாட்டின் அடிப்படையில் பெண்கள் தலைமைத்துவம் உள்ள குடுப்பங்களுக்கன உதவி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக இன்று வெள்ளவத்தை மயூராபதி பிரதேசத்தில் நூறு பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வினை, பல்வேறு சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் உமா சந்திரபிரகாஷ் அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார்கள். மேலும் இந் நிகழ்வில் மயூராபதி அம்மன் ஆலைய தர்மகர்த்தா சுந்தரலிங்கம் ஐய்யா அவர்களும், மதகுரு சந்துரு அவர்களும் ஜனனம் அறக்கட்டளையின் அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.




-கலாநிதி ஜனகன் ஊடகப் பிரிவு-


No comments:

Post a Comment