Recent Posts

Search This Blog

இன்றைய வானிலை அறிக்கை விபரம்.

Wednesday, 6 July 2022



சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் 

****************************


புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும் 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து  தென் மேற்குத் திசையை நோக்கி  காற்று வீசும். 


புத்தளம்  தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 


புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களைப் பயன்படுத்துகின்ற  மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி.



No comments:

Post a Comment