Recent Posts

Search This Blog

மக்கள் எங்களுக்கு கல் எறிகின்ற நிலமை வந்திருக்கிறது.

Wednesday, 6 July 2022


மக்கள் தங்கள் மீது கல் எறிகின்ற நிலமை வந்திருக்கிறது என சிவனேசந்திரை சந்திரகாந்தன் எம் பி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

இன்று பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர் ,

“எனது மாவட்டத்தில் இன்று பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.எமது மட்டக்களப்பு மாவட்டம் விவசாய மாவட்டம் . இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறுவடை செய்திருக்க வேண்டும்.டீசல் பிரச்சினை காரணமாக அது நடைபெறவில்லை. நான் ஒரு தனி கட்சி உறுப்பினர். எனது கோரிக்கைக்கு செவி சாய்த்து அறுவடை நடவடிக்கைகளுக்காக 10 லட்சம் லீட்டர் டீசலை எமது மாவட்டத்திற்கு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என பிள்ளையான் எம் பி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment