Recent Posts

Search This Blog

பொதுஜன பெரமுன தலைவர்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேறவில்லை - நாட்டிலேயே தங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை வெளியானது

Monday, 11 July 2022


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு தலைவரும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் கடந்த 9ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலும் தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் உயர்பீட தலைவர்கள் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டிலேயே தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment