Recent Posts

Search This Blog

இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி இன்னும் கையளிக்கவில்லை ; சபாநாயகர் தெரிவிப்பு

Wednesday, 13 July 2022


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை இன்னும் கையளிக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தனது பதவி விலகலை கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.


இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடுத்து, தம்மையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலகுமாறு கோரி, ஜனாதிபதி நேற்று காலை மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றார்.

புகலிடம் கோரியதாகக் கூறப்படும் ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் தனது இராஜினாமாவை கையளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புக் காரணங்களால் ஜனாதிபதியால் விமானத்தில் ஏற முடியாமல் போனதாகவும், சிங்கப்பூர் செல்வதற்காக தனியார் விமானம் ஒன்றுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment