Recent Posts

Search This Blog

பிரபாகரனை அழிப்பதற்கு தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்சவின் மரணத்திற்காக காத்திருப்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது

Sunday, 3 July 2022


மகிந்த ராஜபக்சவிடம் குறைபாடுகள் இருந்தாலும் அவர் இந்நாட்டிற்கு முக்கிய பணியை ஆற்றிய வரலாற்று நாயகன் ஆவார் என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


அப்படிப்பட்ட ஒரு தலைவன் இறக்கும் சந்தர்ப்பத்தை பலர் ஆவலாக எதிர்பார்த்திருப்பது துரதிஷ்டவசமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கொலைகாரன் பிரபாகரன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் பால் சோறு சாப்பிட்டு, பட்டாசு கொளுத்தி கொண்டாடிய இந்த நாட்டிலுள்ளவர்கள்; அந்த பிரபாகரனை அழிப்பதற்கு தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்சவின் மரணத்திற்காக காத்திருப்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் நேற்றுமுன்தினம் தான் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் அவர் மிக நலமுடன் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment