ஹஸ்பர்_
கிண்ணியா தள வைத்தியசாலை அனைத்து ஊழியர்களும் தமக்கு எரிபொருள் வழங்குமாறு கோரி இன்று (12) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் வைத்தியர்கள் தாதிமார்கள்,மருந்தாளர்கள் ஊழியர்கள் உட்பட சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
கிண்ணியா தள வைத்தியசாலையில் ஆரம்பித்த ஊர்வலமானது,ஓரீகன் பாலம் ஊடாக,புகாரியடி சந்தியை சென்று அங்கிருந்து,
கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துவிட்டு மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்தை சென்றடைந்தனர் .
"உயிர் காக்கும் போது முன்னிலையில் பெட்ரோல் அடிக்கும் போது பின்னிலையில்"
"எரிபொருள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு வழங்கு"
"பெட்ரோல் இல்லை வைத்தியசாலை இல்லை நோயாளிகள் கவலைக்கிடம்"
முதலான வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.
சுமார் இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டங்களை செய்ததோடு கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் பிரதேச செயலகத்திலிருந்து மீண்டும் வைத்தியசாலை சென்றடைந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்


No comments:
Post a Comment