
வெளிநாடு செல்லும் அரச இராஜதந்திரிகளுக்கு வி ஐ பி நுழைவாயில் ஊடாக வழங்கப்படும் விஷேட சேவையை இடைநிறுத்த விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
தற்போது அரசுக்கு எதிராக நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட எவருக்கும் இனி விமான நிலைய வி ஐ பி சேவை வழங்கப்படாது என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment