Recent Posts

Search This Blog

ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு அமெரிக்காவின் தேவைக்காக செயற்பட்டு ''ஜோக்கர்''நாடாகிவிடக் கூடாது

Tuesday, 9 January 2024


இலங்கை அணிசேரா நாட்டுக்கொள்கையை பின்பற்றும் நாடாக இருந்தால் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஜனாதிபதியால் எவ்வாறு இலங்கை கடற்படை கப்பலை அனுப்ப முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம்  கேள்வி எழுப்பினார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) விசேட கூற்றை முன்வைத்தே   இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்,


 உகண்டா நாட்டுக்கு  சபாநாயகருடன் நாங்கள் கடந்த வாரம்  சென்றிருந்தோம். அதேபோன்று எதிர்வரும் 18ஆம் திகதி உகண்டாவில் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் மாநாடு இடம்பெற உள்ளது .அந்த மாநாட்டுக்கு ஜனாதிபதியும்  செல்ல வுள்ளார்.


 அணிசேரா நாடுகளின் கொள்கை என்ன?  அணிசேரா நாட்டுக்கொள்கையை பின்பற்றும் நாடாக  இலங்கை உள்ளது. ஆனால் தற்போது அமெரிக்க விசுவாசமா எமது அணிசேரா கொள்கை?


 அமெரிக்காவின், இஸ்ரேலின் தேவைக்கு மேலும் சில நாடுகளுடன் இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு இலங்கை கடற்படையை அனுப்புவதாக இருந்தால், ஜனாதிபதி எதற்காக அணிசேரா நாடுகளின் தலைவர்கள் நாடாடில் கலந்துகொள்ள உகண்டா  செல்ல வேண்டும்?

 எனவே  இலங்கை  அணிசேரா கொள்கையை பின்பற்றும் நிலையில் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களை  அடக்குவதற்கு அமெரிக்காவின் தேவைக்காக செயற்பட்டு ''ஜோக்கர்''நாடாகிவிடக் கூடாது என்றார்.  



No comments:

Post a Comment