Recent Posts

Search This Blog

கட்டுக்களை பள்ளி வளாகத்தில் திலித் ஜயவீர !

Sunday, 7 January 2024


தெரன ஊடக நிறுவனத்தின் தலைவர்  திரு. திலித் ஜயவீர கண்டி கட்டுக்களை ஜும்ஆ பள்ளிவாயிலில் அமையப் பெற்றுள்ள நல்லிணக்க மையத்துக்கு 2024.01.07 நேற்று பிற்பகல் விஜயம் செய்தார். 


அவரோடு சுதூம்பொல ராஜ மகா விகாரையின் விகாராதிபதி, சட்டத்தரணிகளான எம்.டப்லிவ்.எம். அமீன், எம்.ஸி.எம். நவாஸ் ஆகியோரும் விஜயம் செய்தனர்.


அங்கே, கண்டி மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 


இந்த நிகழ்வில், கண்டி மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக், அதன் உறுப்பினர்களான ரீஸா வாஹித், பி.ம் அனூர்தீன் ஹாஜியார், கட்டுக்களை மஸ்ஜித் மௌலவிகளான 


ஏ.எம். அஸ்லம், எஸ். எம். இர்ஷாத் மற்றும் எம்.எச்.எம். ராஃபி ஆகியோரோடு, கட்டுக்களை ஜும்ஆ பள்ளி நிர்வாக சபையின் பொருளாளர் எம்.எச்.எம். ரவூஃப்டீன் மத்திய மாகாண அரசியல் ஒன்றியத்தின் செயலாளர் எல்.ஏ.யூ.எல்.எம். நளீர் மற்றும் பிரதேச வாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment