Recent Posts

Search This Blog

நிந்தவூர் ஆதார வைத்தியாலையில் உலக எய்ட்ஸ் தடுப்பு தின நிகழ்வுகள்

Saturday, 2 December 2023


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ILM றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக  நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. MB. அப்துல் வாஜித் தலைமையில் உலக எய்ட்ஸ் தடுப்பு  நிகழ்வுகள் நேற்று 01-12 2023ம் திகதி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

 நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாலியல் நோய்க்கான பிரிவு, நிந்தவூர்  வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
 இந்நிகழ்வு காலை 07.00 மணியளவில் 
 நிந்தவூர் சுக வாழ்வுக்கான அமைப்பினரின் பங்குபற்றுதலுடன் (Living Well Association)  விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட நிகழ்வும்
பின்னர் தொடர்ந்து நிந்தவூர் ஆதார வைத்திசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலை மாணவர்கள், தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர், அரபுக் கல்லூரி மாணவர்கள்,பொலீஸ் அதிகாரிகள், பிரதேச செயலக உறுப்பினர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி SR. இஸ்ஸதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
 மேலும் கல்முனை சுகாதார சேவைகள்  பணிமனையின் எய்ட்ஸ் மற்றும் பாலியல் தொடர்பான நோய்களுக்கான பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் MNM. தில்ஷான் அவர்களால் விரிவுரைகள் நிகழ்தப்பட்டது.
 
இந்த நிகழ்வுக்கு நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr. KLM.  றயீஸ் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் MA நபீல், கல்முனை பிராந்திய தொற்றா நோய்களிற்கான பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. MIMS இர்ஸாத், மற்றும் Dr. ALA. கபூர் DTCO,  வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில்  பிரதிநிகளினால் வைத்தியசாலை வளாகத்தில் மரநடுகையும் இடம் பெற்றது சிறப்பம்சமாகும்.




No comments:

Post a Comment