Recent Posts

Search This Blog

நீரிழிவு நோய் கணவன் மனைவியின் நெருக்கத்தை சீர்குலைக்கும்

Tuesday, 19 December 2023


நீரிழிவு நோயாளிகள் பல வகையான பாலியல் மற்றும் உடல் உறவு சார்ந்த பிரச்சினைகளை சந்தித்தாலும் அது தொடர்பாக மிக அரிதானவர்களே இவை சம்பந்தமாக தைரியமாக வைத்தியரிடமோ, நெருங்கியவர்களிடமோ மிக முக்கியமாக தனது கணவனிடமோ/ மனைவியிடமோ வெளிப்படையாக கலந்து பேசுகின்ற நிலைமை பொதுவாக காணப்படுகிறது.


இதற்கு பல  காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக சமூக, சமய, கூச்சம் (வெட்கம்)  உணர்வே காரணமாகும்.

இதனால் அவர்களது இல்லற வாழ்க்கை பல சமயங்களில் பிரச்சனைகளுடன் கூடிய வேதனையாக அமைந்து விடுகின்றது. இதனால் குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் மற்றும் பிளவுகளும், பிரிவுகளும் அதிகரித்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மையாகும்.*( பாலியல் திருப்தியின்மை, சந்தேகம், மன உளைச்சல், மன அழுத்தம் மற்றும் வேறு தொடர்புகள் உண்டாகுதல்)*


எனவேதான் இது தொடர்பாக எங்களிடம் ஒரு விழிப்புணர்வு இருப்பது தற்காலத்தில் மிக இன்றியமையாத ஒன்றாகும். ஏனென்றால் இது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய பிரச்சினைகள் என்று அதிகமானவர்கள் தெரிந்து இருப்பதில்லை.



நீரிழிவு நோயாளிகளின் இரத்திலுள்ள குளுக்கோஸின் அளவு தொடர்ச்சியாக அதிகரித்து காணப்படும் போது அது இரத்தக் குழாய்களில் பாதிப்பையும் மற்றும் நரம்புக் கலங்களில்  சேதங்களையும் ஏற்படுத்துவதனால் பல பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றது. 


இங்கு நீரிழிவு நோயுடன் தொடர்புடைய 7  பாலியல் செயலிழப்புகள் சம்பந்தமாக ஓரளவு தெரிந்து கொள்வோம்.



 *1) (low libido) உணர்ச்சி குறைவு ஏற்படுதல்.* 


உயர் இரத்த குளுக்கோஸ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் உணர்ச்சியை குறைக்கிறது.


 *1.A* ) ஆண்களில்  (low libido) உணர்ச்சி குறைபாடு ஏற்பட காரணம் என்னவென்றால்.


ஆராய்ச்சியின் படி,


 நீரிழிவு மற்றும் அதிக உடற்பருமன்  ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன்  (Testosterone )அளவை குறைக்கும்  முக்கிய காரணிகளாகும்.


 உங்களுக்கு (Type2 DM) நீரிழிவு நோய் இருந்தால், நீரிழிவு இல்லாத மனிதனை விட டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


குறைந்த டெஸ்டோஸ்டிரோனின் உள்ளவர்களில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பார்போமானால்


## பாலியல் ஆர்வம் குறைந்து போதல் 


## செக்ஸ் விறைப்புத்தன்மை குறைதல் மற்றும் செயலிழப்பு தன்மை அதிகரித்தல்.


##மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வடைந்து  போதல்


 ## தசைகள் மெலிந்த உடல் நிறை ஏற்படல்.


##அதிக சோர்வு, ஆற்றல் குறைவு ஏற்படல்.

என்பனவாகும்.




 *1.B* ) பெண்களில்   உணர்ச்சி குறைவு ஏற்படுதல் (low libido)


ஆண்களை விட பெண்களிலே உணர்ச்சி குறைவு( low libido) மிக பொதுவானதாகும்.


நீரிழிவு உட்பட பல காரணிகள் இதற்கு காரணமாகும்.


 *2) தூண்டுதல் பிரச்சனை (Arousal problem)ஏற்படுதல்* .?


கிளர்ச்சி என்பது உடலுறவு ஆசைக்கு உடலின் எதிர்வினை எனலாம். இது பாலியல் உறுப்புகளில் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டின் மூலம் வழங்கப்படுகிறது.


நீரிழிவு உங்கள் நரம்பு மற்றும் இரத்த குழாய்களில் பாதிப்பை  ஏற்படுத்துவதனால் இது விழிப்புணர்வை மிகவும் கடினமாக்கலாம், ஏனெனில் உங்கள் உடலில் தூண்டுதலுக்கு தேவையான ஹார்மோன்கள், இரத்தம் மற்றும் நரம்பு சமிக்ஞைகளை மூளைக்கும் சுரப்பிகளுக்கும் அனுப்ப முடியாது போவதனால் ஆகும்.



 **3) ஆணுறுப்பில் விறைப்பு தன்மை குறைபாடு ஏற்படுதல்* 

 *Erectile Dysfunctional* 


(இது ஆண்மையின்மை என்றும் அழைக்கப்படுகிறது)


விறைப்பு தன்மை குறைபாடு பொதுவாக வயதாகும் போது ஏற்படக்கூடியதாகும். ஆனால் இது சீனி நோய் உள்ளவர்களுக்கு 10-15 வருடங்களுக்கு முன்பே ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கு  காரணம் என்னவென்றால்.


##)  இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு or  பாதிப்பு, இரத்த ஓட்டம் குறைவு ,  நைற்றிக் ஒக்சைட் உற்பத்தி குறைவு (இரத்தகுழாய் விரிந்து பெரிதாக உதவும்),  இன்டோதீலின்  உற்பத்தி கூடுதல் (இரத்த குழாயை சுருக்க உதவும்) இதனால் விறைப்பை ஏற்படுத்த போதுமான இரத்தம் ஆணுறுப்பில் சேராது போதல்.


##)  நரம்புக் கலங்களின் தொழிற்பாடுகள் செயல் இழந்து போவதால் ஆணுறுப்பில் உணர்வு குறைகிறது  இதனால் மூளைக்கு செல்லும் சமிக்ஞை குறைவால் தொடர்ச்சியாக விறைப்பை பேண முடியாது போகின்றது.


##) Testosterone hormone அளவு குறைந்து காணப்படும் போது விறைப்பு தன்மை குறைவு ஏற்படும்.


## கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக காணப்படுவதால் ஆணுறுப்பில் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு விறைப்புக்கு தேவையான இரத்தம் சேராது போதல்.



நீரிழிவு நோயைத் தவிர வேறு காரணிகள் மன அழுத்தம், பதட்டம், குற்ற உணர்வு, மனச்சோர்வு, குறைந்த சுயமரியாதை மற்றும் பாலியல் தோல்வி பற்றிய பயம் ஆகியவை உளவியல் காரணிகளும் விறைப்புச் செயலிழப்பை ஏற்படுத்தும்



 *4. *Vaginal dryness* 

   *யோனி வறட்சி  ஏற்படுதல்* 


பெண்களுக்கு வயதாகும்போதும், குறிப்பாக மாதவிடாய் நிற்கும் போதும், ஈஸ்ட்ரோஜன் (Oestrogens) குறைபாடு காரணமாக யோனி வறட்சி ஏற்படலாம்.


ஆனால் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு பிறப்புறுப்பு மற்றும் பெண்குறிமூலத்தில் இரத்த ஓட்டம் குறைவு காரணமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு யோனி வறட்சி இரண்டு மடங்கு அதிகமாகும். இதன் காரணமாக உடலுறவின்போது வலியும் மற்றும் சேதங்களும் ஏற்படுகிறது. 


 *5)  *பாலியல் உச்சம் அடையாமை.* 

( *Orgasm* )* 


புணர்ச்சி அல்லது பாலியல் உச்சம் என்பது பாலியல் பதில் சுழற்சியின் போது திரட்டப்பட்ட பாலியல் உற்சாகத்தின் திடீர் வெளியேற்றம் ஆகும்,


 இதன் விளைவாக இடுப்பு பகுதியில் சந்தமான (rhythmic), தன்னிச்சையான தசை சுருக்கங்கள் ஏற்படுவதனால் பாலியல இன்பம் உச்சம் அடைகிறது. இது தன்னிச்சையான அல்லது தன்னியக்க நரம்பு மண்டலத்தால் (Autonomic nervous system) கட்டுப்படுத்தப்படுகிறது.


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் உச்சம் அடைய  சிரமம் ஏற்படுவதற்கான காரணங்கள் இந்த தன்னிச்சையான அல்லது தன்னியக்க நரம்பு மண்டலம் பாதிக்கபடுவதால் ஆகும்.




 *6) உடலுறவின் போது வலி* 


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய ஆணுறுப்பு விறைப்பு அடையும் போது வளைந்து கோணலாக காணப்படுதல். இதை paronyes disease என்று அழைக்கப்படும்.


இது ஆணுறுப்பில் scar tissues காயம் ஆறிய தழும்புகள் உருவாகி, விறைப்புத்தன்மையின் போது ஆணுறுப்பு வளைந்து காணப்படும். 

இந்த வளைந்த  ஆணுறுப்புடன் உடலுறவில் ஈடுபடும் போது அது மிகவும் வலியினை ஏற்படுத்துகிறது.


பெண்களுக்கு யோனிவறட்சி உடலுறவின் போது வலிக்கு முக்கிய காரணம் அமைந்தாலும். 

 சிறுநீர் கிருமிதொற்று மற்றும் வெஜினல் ஈஸ்ட் (yeast) பங்கசு தொற்றுக்கள் உடல் உடலுறவின் போது வலியை ஏற்படுத்தும் 


 *7) காயங்கள் மற்றும் துர்வாடை உருவாகுதல்* .


பொதுவாக பங்கசு தொற்று சீனி கட்டுப்பாடு இல்லாதவர்களளுக்கே அதிகம் ஏற்படும். இது ஒரு வகையான விரும்பத்தகாத வாசனையை ஏற்படுத்துவதோடு காயங்கள் ஏற்படுகின்றது. இதனால் பாலியல் உறவில் ஈடுபடுவதில் விருப்பமின்மை ஏற்படுகிறது.


 *நீரிழிவு நோயாளிகளின் பாலியல் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது* 


01. முதல் படி உங்கள் மருத்துவரிடம் உங்கள் குளுக்கோஸின் அளவை கட்டுதபடுதத்துவதற்குரிய சரியான நடவடிக்கைகளை கலந்து ஆலோசித்தல் வேண்டும்.


02. உங்கள் இரத்த குளுக்கோஸின் அளவை  கட்டுப்பாட்டில் வைத்திருப்பதனால் உங்கள் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தலாம் அல்லது மேலும் மோசமடைவத தடுக்கலாம்

  

03. தகுதியான பாலியல் மருத்துவ நிபுணர், மனநல நிபுணர் மற்றும் ஆலோசகர் போன்றவர்களிடம் உரிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுதல்.



04. இறுதியாக, வாழ்க்கை முறை மாற்றங்கள் (life style change), ஆரோக்கியமான உணவு ( healthy foods), வழக்கமான உடற்பயிற்சி ( regular exercise), மன அழுத்தம் நிவாரணம்  (stress relief )உங்கள் முழு உடலையும் மனதையும் திடமாக வைத்திருக்க உதவுவதோடு பாலியல் முன்னேற்றத்துக்கும் உதவும்.


ஆகவே எங்களுடைய தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் முயற்சிப்போம்.



Dr Ahlam M Musthaffa

MBBS (SJU) , MD (Colombo)

University Hospital of Derby and Burton NHS Foundation Trust

United Kingdom

( Former Acting Consultant Physician in Internal Medicine 

BH-Hingurakgoda)



No comments:

Post a Comment