Recent Posts

Search This Blog

பொலிஸார் என தெரிவித்து வந்த சிலர், இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டு, வழியில் விட்டுச் சென்ற சம்பவம்.

Friday, 8 December 2023


ஹபராதுவ தல்பே வடக்கு பகுதியில் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொலிஸார் எனக் கூறி காரில் வந்த சிலர், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, கடத்திச் சென்று காலில் துப்பாக்கியால் சுட்டு, வழியில் விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


No comments:

Post a Comment