
பௌத்த மதத்தை சீரழிக்க பாரிய சதித்திட்டம் ஒன்று இடம்பெறுகிறது என உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த தலைவர்களை அவர்களது பதவிகளில் இருந்து நீக்கும் பாரிய சதித்திட்டம் இடம்பெறுவதாக கூறிய அவர் தேரர்கள் போன்று வேடமிட்டவர்மளுக்கு பணம் வழங்கி அவர்கள் மூலம் பௌத்த சாசணம் சீரழிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதற்காக மாற்று மதத்தை சேர்ந்த சிலர் பாரிய அளவில் நிதி அளிப்பதாகவும் புத்த சாசணத்தை அழிக்க பணம் வழங்குவது யார் என்பதை விசாரணை மூலம் கண்டறிய வேண்டும் என அவர் மேலும் கூறினார்.


No comments:
Post a Comment