Recent Posts

Search This Blog

எழுத்துத் துறையில் இந்தியாவில் சாதித்த மடவளைச் சகோதரி - மதீனாவின் பழைய மாணவி ரிஸ்வானா ஜெய்னுலாப்தீன்

Wednesday, 15 November 2023


#இந்தியா சென்று வந்தார்
#விருதை வென்று வந்தார்

மடவளைச் சகோதரி மதீனாவின் பழைய மாணவி Riswana Jainulabdeen கடந்த நவம்பர் 5ம் திகதி 2023 அன்று இந்தியா சென்னையில் நடைப்பெற்ற #நோபல் #உலக #சாதனையில் பங்கேற்று தனது விருதினை பெற்று வந்தார்.


100 கவிஞர்கள் 100 கவிதைகள் வீதம் மொத்தம் 10,000 கவிதைகள் கொண்ட #கவித்தேனருவி தொகுப்பு நூல்.

தொகுப்பாசிரியர் கவிஞர் என் ஜாகிர் உஷேன் தலைமையில் நடைபெற்றது.


கவிஞர்களும் பார்வையாளர்கள் பெருந்திரளானரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


எல்லா விதமான கவிதைகளையும் எழுதும் ஆற்றல் உடைய அவருடைய கவிதைகள்
#அறுசுவையில் என் #வரிகள் என்ற தலைப்பில் தொகுப்பாக்கப்பட்டது.


35 வருடங்களாக எழுத்துத் துறையில் வலம் வரும் சகோதரி றிஸ்வானா முகப்புத்தகப் போட்டிகளில் கலந்துகொண்டு நிறைய கவிதைகள், ஆக்கங்கள் எழுதி 250க்கும் மேற்பட்ட மின்சான்றிதழ் பெற்றெடுப்பதும், வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டும் சஞ்சிகைகளில் வெளியிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்னரும் இந்தியாவில் கவிதை போட்டியில் கலந்துகொண்டு விருதொன்றை பெற்று இருக்கிறார் என்பதை குறிப்பிடுவதும் மகிழ்ச்சி.




No comments:

Post a Comment