சுமார் 5 ஆயிரம் ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தொடங்கினர்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது.
பதிலுக்கு இஸ்ரேலும்
த னது தீவிர தாக்குதலை தொட ங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ,
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியு ள்ளார்.
அப்போது, இஸ்ரேலில்
உள்ள நிலை மை குறித்து மோடியிடம், நெதன்யா கு விளக்கி உள்ளார்.
இது குறித்து நரேந்திர மோடி தனது X தளத்தில்
சமூக வலைதளப் பக்கத்தில் "பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகுவின் தொலைபேசி அழைப்புக்கும், இஸ்ரேலில் தற்போதைய நிலைமை குறித்து தெரிவித்ததற்கும் நன்றி.
இந்த கடினமான நேரத்தில்
இந்திய மக்கள், இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கின்றனர்
என்றும், தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும்
இந்தியா கடுமையாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் கண்டிப்பதாகவும் நெதன்யாகுவிடம் உறுதிபட தெரிவித்துள்ளேன்.” என பதிவிட்டுள்ளார்.


No comments:
Post a Comment