Recent Posts

Search This Blog

(கடிதம் இணைப்பு) "எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை" என கடிதம் எழுதி வைத்துவிட்டு நண்பிகள் இருவர் சமையல் அறையில் தூ*க்*குப் போட்டு உயிரிழப்பு.

Monday, 16 October 2023


கிளிநொச்சியில் நேற்று (16) 2 மணியளவில் 17 வயதான சிறுமிகள் இருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.



எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு.

எங்களுக்கு
வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.



இச் சம்பவத்தில் சுரேஸ்குமார் தனிகை வயது 17 லோகேஸ்வரன் தமிழினி

வயது 17 ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச்

சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.



இவர்கள் இருவரும் இறுதியாக

நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக

காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.



இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் சடலங்களை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர்.



அத்தோடு இது தற்கொலையா கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments:

Post a Comment