Recent Posts

Search This Blog

எனது பெயரில் இதுவரை மின்சாரக் கட்டணம் எதுவும் பெறவில்லை - சனத் நிஷாந்த எனக்கு தொலைபேசியில் அறிவித்ததன் பின்னரே மின் கட்டணத்தை அவர் செலுத்தியது தெரிய வந்தது ; நாமல்

Monday, 2 October 2023


பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மின் கட்டணத்தை செலுத்தியமை தொடர்பில் சனத் நிஷாந்த தனக்கு தொலைபேசியில் அறிவித்ததன் பின்னரே தமக்கு தெரியவந்ததாக
நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சனத் நிஷாந்த செலுத்திய மின்சாரக் கட்டணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தனது பெயரில் இதுவரை மின்சாரக் கட்டணம் எதுவும் பெறவில்லை, தன் பெயரில் கட்டண நிலுவையும் இல்லை என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.


சனத் நிஷாந்த மின்சார சபைக்கு சென்று வினவிய போது நாமல் ராஜபக்ஷவின் பெயரில் மின் கட்டணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சனத் நிஷாந்த திருமண வைபவம் தொடர்பான மின் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அபிவிருத்தி செய்த மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை மற்றும் நன்றியை தெரிவிக்கும் வகையில் இந்த கட்டணத்தை செலுத்தியதாகவும் அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்திருந்தார்.


No comments:

Post a Comment