Recent Posts

Search This Blog

பாங்கொக் ஷாப்பிங் மாலில் நுழைந்து அப்பாவி மக்களை சிறுவன் ஒருவன் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி இது தான்.

Wednesday, 4 October 2023


இரண்டு நாட்களுக்கு முன்னர் பாங்கொக்கின் மிகப் பெரியதும், பிரசித்தமானதுமான சியாம் பரகொன் என்கிற மோல் ஒன்றிற்குள் நுழைந்த 14 வயதான சிறுவன் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியைக் கொண்டு அங்கிருந்த மூன்று பேரைச் சுட்டுக்கொன்றிருக்கிறான்.

Pathetic! இனந்தவர்களில் ஒருவர் சீனர், மற்றவர் பேர்மீஸ், இன்னொருவர் தாய். இதில் இருவர் பெண்கள். காரணத்தைக் கேட்டால் திகைத்துப்போய்விடுவீர்கள்.

வீட்டில் அம்மாவோடு கடும் சண்டை. அம்மாவோடு போட்ட சண்டையில் கடும் கோபத்திற்குள்ளான சிறுவன், பெற்றோர்களுக்குத் தெரியாமல் தன்னுடைய அறையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மோலிற்குள் வருகிறான். அம்மாவோடு அல்லவா சண்டை, ஆதலால் பெண்களைக் கொல்ல வேண்டும்! பெண்குலத்தை அழிக்க வேண்டும். அதற்கு இலகுவான வழி, மோலிலிருக்கும் பெண்கள் கழிப்பறைக்குள் நுழைவதுதான். அப்படியே, நேராக women WC க்குள் புகுந்தவன் பையிலிருந்த துப்பாக்கியை எடுத்துச் சரமாரியாகச் சுடுகிறான். உள்ளேயிருந்த பெண்களில், காயப்பட்டவர்கள் போக, இருவர் இறந்துபோகிறார்கள்.

- அச்சிறுவனைக் கைது செய்த பொலிசார் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கிறார்கள். அவர்களோ, தங்களால் வர முடியாது என்று மறுத்துவிடுகிறார்கள்.

- 14 வயது மகன் வீட்டில் துப்பாகி ஒன்றை வைத்திருந்தது தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் பெற்றோர்கள்.

- கொலைகாரப் பையனின் பெற்றோர் இருவரும் பிரசித்தமான ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்.

- பெற்றோர் மீதான கட்டுக்கடங்கா கோவமே இச்சிறுவனைக் கொலை செய்யுமளவிற்குத் தூண்டியது என்கிறார்கள் பொலிசார். அதுவும் அம்மா மீதான கோவம்!

- காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குப் பயணித்த அம்பியுலன்ஸ் வண்டி, வீதியிலிருந்த வாகன நெரிசலால் உரிய நேரத்திற்குள் வைத்தியசாலையைச் சென்றடைய முடியவில்லை. இதுவே இருவரின் இறப்பிற்குக் காரணம் என்கிறார்கள். உலகின் மேசமான வாகன நெரிசலுக்கு பேங்கொக் பெயர்போன நகரம்.

இப்போது சிறுவனை rehabilitation க்கு அனுப்பியிருக்கிறார்கள். பெற்றோரை fine கட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

குழந்தைகளோடு செலவு செய்ய நேரம் இல்லாதவர்கள் தயவுசெய்து குழந்தைகளை பெற்று கொலைகாரர்களாக மாற்றாமல், குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் இருந்து விடுவது நீங்கள் சமூகத்திற்கு செடியும் பெரிய உதவி.
- By : அமல்ராஜ் Francis



No comments:

Post a Comment