Recent Posts

Search This Blog

திருமண நிகழ்வில் இரு நபர்களுக்கு இடையிலான உரையாடல், வாள்வெட்டு வரை சென்றதில் ஒருவர் பலி.

Friday, 13 October 2023


மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலிம்புல பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றின் போது 59 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விலிம்புலவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மாகம்மனகே சிறிமேவன் என்பவர் கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்து ராதாவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விலிம்புலவில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (12) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவருக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் வாள்வெட்டு வரை சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்



No comments:

Post a Comment