Recent Posts

Search This Blog

ஏற்கனவே பலரை பலி எடுத்த யானை.., யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்கி பலத்த சேதம்.

Sunday, 1 October 2023


அனுராதபுரம் - தந்திரிமலை பிரதான வீதியின் மானிங்கமுவ - ஓயாமடுவ பிரதேசத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது காட்டு யானை தாக்கியுள்ளது.

நேற்றிரவு (30) இடம்பெற்ற தாக்குதலில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாத்தறையிலிருந்து அனுராதபுரம் நோக்கி யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீதே யானை தாக்கியுள்ளது.

இந்த யானை அப்பகுதியில் பல உயிர்களை பலிவாங்கியுள்ளதுடன் வீடுகளுக்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த யானை இதற்கு முன்னரும் வீதியில் செல்லும் வாகனங்களை தாக்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


No comments:

Post a Comment