மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 6 வயது சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்த குழந்தையின் தந்தை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கு ஒன்றில் ஆஜரானபோது இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவருடன் வந்த இவரின் மகள் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
... 


No comments:
Post a Comment