Recent Posts

Search This Blog

மடவளை பஸார் பெfஸ்ட் ஸ்டப் (First Step Montessori Sports Meets) பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டி 2023

Monday, 18 September 2023



மடவளை பஸாரில் கடந்த 1 வருடமாக இயங்கி வருகின்ற பாலர் பெfஸ்ட் ஸ்டப் (First Step Montessori Sports Meets)  பாடசாலையினால் (17/09/2023) சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி ஒன்று பெfஸ்ட் ஸ்டப் (First Step Montessori Sports Meets) 
பாலர் பாடசாலையின் பணிப்பாளர் திருமதி. நௌபியா ஹஸிம் அவர்களின் தலைமையில் மதீனா தேசிய பாடசாலை மைதானத்தில் வெகு விமரிசையாக ஏற்படாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாத்ததும்பர பிரதேச சபை  செயலாளர்    ப்ரியானி தர்மரத்ன அவர்கள் கலந்துகொண்டார்.

3 இல்லங்களாக முறையே
ஸ்னோ ட்றொப்ஸ்
ப்ளு பெல்
லெவிண்டர் என பிரிக்கப்பட்டு பல சுவாரஸ்யமான பிள்ளைகளை மகிழ்விக்கும் வகையில் 
போட்டி நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது முதலாவது இடத்தை லெவிண்டர் இல்லமும்
இரண்டாவது இடத்தை ஸ்னோ ட்றொப்ஸ் இல்லமும்
மூன்றாவது இடத்தை ப்ளு பெல் இல்லமும் பெற்றுக் கொண்டன கலந்துகொண்ட அனைத்து சிறார்களுக்கும்  பரிசில்களும் வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் வெற்றி கேடயமும் வழங்கிவைக்கப்பட்டன

இந்நிகழ்வுக்கு குறித்த சிறுவர்களின் பெற்றோர்கள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

தகவல் : பஸ்மி காஸிம்..





No comments:

Post a Comment