Recent Posts

Search This Blog

இரவு உணவு உண்ணவே சூதாட்ட விடுதிக்கு சென்றோம் ; பாக்கிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகள் விளக்கம்

Monday, 11 September 2023


ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகள் இருவர் போட்டிகள் நடைபெற்றுவரும் இலங்கையின் கொழும்பில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்ற வீடியோ வெளியாகியிருக்கிறது.


இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கும் நிலையில். அந்த அதிகாரிகள் கொடுத்த விளக்கம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் மேலும் கோபத்தை கிளப்பியுள்ளது.

தற்போதைய பாகிஸ்தான் அணியின் ஊடக மேலாளர் உமர் பாரூக் கல்சன் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் சர்வதேச கிரிக்கெட் பிரிவு பொது மேலாளர் அட்னன் அலி ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

அவர்களது தனிப்பட்ட விடயம் என இதை ஒதுக்க முடியாது.

காரணம். ஐ.சி.சி. விதிப்படி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணியை சார்ந்த அதிகாரிகள் யாரும் சூதாட்டம் சார்ந்த இடங்களுக்கு செல்லக்கூடாது.

ஆனால், அதை மீறி அவர்கள் இருவரும் சென்றுள்ளனர். இந்த விவகாரம் ஊடகங்களில் வீடியோ

ஆதாரத்துடன் வெளியான நிலையில், அந்த அதிகாரிகள், தாங்கள் இரவு உணவு உண்ணவே அந்த சூதாட்ட விடுதிக்கு சென்றதாக விளக்கமளித்துள்ளனர்.

கிரிக்கெட் விமாசகர்கள் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவர்களை உடனடியாக பாகிஸ்தான் அழைத்து பணி நீக்கம் செய்ய வேண்டும்.

அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

பாகிஸ்தான் அதிகாரிகள் இப்படி சிக்குவது முதன்முறையல்ல. முன்னதாக 2015ஆம் ஆண்டில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அப்போதைய அணி மேலாளருமான மொய்ன் கான் சூதாட்ட விடுதிக்கு மனைவியுடன் சென்று சிக்கினார். அவரை பாதி தொடரிலேயே அழைத்து பணி நீக்கம் செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment