
ஈஸ்டர் தாக்குதலை அரசியல் கோணத்தில் பார்ப்பது தொடர்பில் தான் கவலையடைவதாக அதுரலியே ரதன தேரர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் உரையாற்றிய அவர்
ஈஸ்டர் தாக்குதலை அரசியல் கோணத்தில் பார்ப்பது தொடர்பில் நான் கவலையடைகிறேன். ஆளும் கட்சி எதிர்கட்சி என்பதற்கு அப்பால் சென்று நாடு என்ற வகையில் நாம் இதுபற்றி கலந்துரையாட வேண்டும்.
சஹ்ரான் குழு குண்டு வைத்த விவகாரத்தை நாம் அரசியல் ரீதியில் இன்று இரண்டு பக்கமாக பிரிந்து விவாதிக்கிறோமே தவிர குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அடிப்படை வாதிகளின் தலைக்குள் இருந்த அடிப்படைவாதம் என்ன என்பது பற்றி நாம் பேச மறந்துவிட்டோம்.
பணத்திற்காக அல்லது மூளை சலசை செய்யப்பட்டவர்கள் ஈஸ்டர் தாக்குதலை மேற்கோண்டதாக கூறமுடியது. தெமடகொட கோடிஸ்வர வர்த்தகர்களின் புதல்வர்களும் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள். படித்தவர்களின் பணக்காரர்களும் இதில் தொடர்புபட்டுள்ளார்கள்.செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் அத்தா ஒரு பொறியிலாளர்.அவர்கள் கோடிஸ்வரர்களின் பிள்ளைகள். இலங்கையை சேர்ந்த 38 பேச் சிரியா யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என படித்தவர்களும் இந்த உயிரிழந்தவர்களில் உள்ளனர்.
இவை மேற்குலகின் திட்டம் சிலர் கூறுகின்றனர்.ஆனால் தீவிரமான ஒரு அடிப்படைவாதம் இல்லாமல் இவ்வாறான தாக்குதல்கள் இலங்கையில் மட்டுமல்ல உலகமும் முழுக்க நடக்க இயலாது.இந்த விடயம் தொடர்பில் நாம் இன்னும் தீவிரமாக படிக்க வேண்டும்.அதை விட்டு விட்டு நாம் புலனாய்வு பிரிவை நாசமாக்கும் செயலை செய்துகொண்டிருக்கிறோம்.
சஹரான் குழு தொடர்பில் புலனாய்வு பிரிவு பலதடவை எச்சரித்துள்ளது.அவர்களை குற்றம் கூறி நாட்டின் புலனாய்வு பிரிவை கொச்சைப்படுத்த பலவீனப்படுத்த நாம் முனையக்கூடாது.
90 % வீதமான முஸ்லிம் மக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள்.அவர்களே தீவிரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கினார்கள்.ஆனால் 10 அடிப்படைவாதிகளால் 90 பேரை ஆபத்திற்குள் தள்ள முடியும்.அதுதான் ஆப்கானிஸ்தானில் நடந்துள்ளது.


No comments:
Post a Comment