Recent Posts

Search This Blog

புத்தளம் கடற்பகுதியில் 2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கைப்பற்றப் பட்டன.

Tuesday, 12 September 2023


சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான சுமார் 2,223 கிலோகிராம் பீடி இலைகள் புத்தளம் இளந்தடி கடற்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



இளந்தடி கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று(12) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே மேற்படி பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.



70 பொதிகளில் பொதியிடப்பட்ட சுமார் 2,223 கிலோ 100 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment