Recent Posts

Search This Blog

இலங்கையின் புகையிரத சேவை திட்டங்களுக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தது - சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிலான திட்டத்திற்கு கைச்சாத்திடப்பட்டது.

Friday, 22 September 2023

இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இந்தியாவின் IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டது.


இலங்கை தொடருந்து சேவையின் மஹோ முதல் அனுராதபுரம் வரையிலான 66 கிலோமீட்டர் தூரம் பாதைக்கு  சமிக்ஞை விளக்கு அமைப்பை வடிவமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.


14.90 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தம் இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்; இலங்கையின் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத்; கையொப்பமிடும் நிகழ்வின் போது இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இலங்கை ரயில்வே மற்றும் IRCON Ltd ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 


14.90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 318 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய கடன் வசதியில்  (LOC) கீழ் குறிப்பிடப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படுவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


இந்நிகழ்வில் உயர்ஸ்தானிகர் தனது உரையில், இலங்கை மக்களின் போக்குவரத்தை  இலகுபடுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த  திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

தற்போதைய சூழ்நிலையில் இந்த திட்டத்திற்கான இந்திய கடன் வசதி,  இலங்கை மக்களுடன் இந்திய அரசாங்கமும் மக்களும் நிற்க வேண்டும் என்ற தொடர்ச்சியான விருப்பத்தை அடையாளப்படுத்துவதாக அவர் எடுத்துரைத்தார். 

குறிப்பாக கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு பல வழிகளில் ஆதரவளித்த இந்திய பிரதமர்  நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நன்றி தெரிவித்தார். இலங்கை ரயில்வே திட்டங்களுக்கு அண்மைக்காலமாக இந்தியாவில் இருந்து மட்டுமே  இந்திய கடன் வசதி வடிவில் ஆதரவு கிடைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.


ரயில்வே துறையில் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான திட்டங்கள் இன்றுவரை 5 இந்திய  கடன் வசதிகளின்  கீழ் முடிக்கப்பட்டுள்ளன. 

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த IRCON Ltd, இந்திய உதவியுடன் இலங்கையில் பல வேலைத்திட்டங்களை நிறைவு செய்துள்ளதுடன், இலங்கை ரயில்வேயின் புனர்வாழ்வு மற்றும் நவீனமயமாக்கல், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.


தற்போது, ​​IRCON Ltd ஆனது, மஹோவில் இருந்து ஓமந்தை வரையிலான (128 கிமீ) பாதை புனரமைப்பு மற்றும் துணைப் பணிகள் உட்பட ரயில் பாதையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை USD 91.27 மில்லியன் செலவில் மேற்கொள்கிறது. இத்திட்டத்தின் கீழ், அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான பாதை புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்திலிருந்து மாஹோ வரையிலான பகுதிக்கான பணிகள் 2024 ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும்.



No comments:

Post a Comment