உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால், 1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பு (PAFFREL) தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில்,
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் இது தொடர்பான தீர்மானம் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றல்ல. இதுபோன்ற முடிவுகளை எடுப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?
தற்போது தேர்தல் நடைபெறவில்லை என்றாலும், உள்ளூராட்சி தேர்தலை ஒரு கட்டத்தில் நடத்தியே ஆகவேண்டும்.
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்காக, வாக்குச் சீட்டு அச்சிடுதல் உட்பட, இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே பெரும் தொகையை செலவிட்டுள்ளதாகவும் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தேர்தல்கள் பிற்போடப்பட்டமையினால் வேட்புமனுக்களை சமர்ப்பித்தவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதை கருத்திற்கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment