Recent Posts

Search This Blog

அம்பாரை, மட்டக்களப்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று மழை எதிர்பார்ப்பு -

Thursday, 24 August 2023



ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.


மேல் மாகாணத்திலும் அத்துடன் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும். 


கடல் பிராந்தியங்களில் 

****************************

   

கொழும்பு  தொடக்கம் காலி ஊடாக மாத்தறை  வரையான கடல் பிராந்தியங்களின்  சில இடங்களில்  மழை பெய்யக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


ஹம்பாந்தோட்டை தொடக்கம்  பொத்துவில் வரையான அத்துடன் புத்தளம் தொடக்கம் மன்னார்,காங்கேசன்துறை  ஊடாக திருகோணமலை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 


மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.



No comments:

Post a Comment