ஹஸ்பர்_
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாகன உதிரிப்பாகங்கள் கொண்ட கடை எரிந்ததில் முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (13)அதிகாலை இடம் பெற்றுள்ளது. குறித்த கடை எறிந்ததில் வாகன டயர் உட்பட பல உதிரிப்பாகங்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தினர் எறிந்த மாதிரிகளை பெற்றுள்ளனர் இது வரைக்கும் தீப்பற்றிய காரணங்கள் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



No comments:
Post a Comment