Recent Posts

Search This Blog

சிங்கராஜா வனப்பகுதியில் தேடலில் ஈடுபட்ட ஈரானிய பிரஜைகள் மூவருக்கு ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

Friday, 11 August 2023


ஈரானிய பிரஜைகள் மூவரும் சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்து கொண்டிருந்த போது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்த சந்தேகநபர்கள் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ வன அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.



குறித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கு உடுகம நீதவான் நீதிமன்றம் ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.



குற்றச்சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்


No comments:

Post a Comment