Recent Posts

Search This Blog

கொழும்பு சாஹிரா கல்லூரி உதைப்பந்தாட்ட அணி வீரர்கள் மீது வெஸ்லி கல்லூரி ஆதரவாளர்கள் தாக்குதல் !

Monday, 7 August 2023

07/08/2023 இன்று  வெள்ளவத்தை குரே மைதானத்தில்  சாஹிரா கல்லூரி மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையே இடம்பெற்ற   உதைபந்தாட்டப் போட்டியின் பின்னர் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


சாஹிரா கல்லூரி வெஸ்லி கல்லூரி இடையே இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில்   ஸாஹிரா கல்லூரி உதைபந்தாட்ட அணி வெற்றி பெற்றதையடுத்து ஆதரவார்களிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதல் சம்பவமாக  மாறியுள்ளது. 


சம்பவம் தொடர்பில் மடவளை நியுசுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்..


சாஹிரா கல்லூரி வீரர்கள் , சிறுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது  ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்று கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாகவும் இதன் காரணமாக சஹிரா கல்லூரி உதைப்பந்தாட்ட அணி வீரர்கள்  10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


சம்பவம் தொடர்பில் 5 பேரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment