நாட்டுக்கு எதிராக செயற்பட்டால் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக களத்தில்
இறங்குவோம் என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் படதும்பர தொகுதியின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போராட்டத்தின் போது பதவியை விட்டு கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறிய போது, தற்போதுள்ள சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தக்கூடிய ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்தது.
அதன் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இளைஞர்கள் விரும்பும் ஆட்சி, பொதுஜன பெரமுனவை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் அமைக்கப்படும் என்றார்.
சமூக ஊடகங்களை ஓரளவு ஒழுக்கத்துடன் கையாள வேண்டும் என்றும் அதற்கு சில ஒழுங்குமுறை அமைப்பு தேவை என்பதை ஒரு தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளதால் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் சுதந்திரமும் ஊடக சுதந்திரத்தைப் போலவே முக்கியமானது என்றும் அதற்காக அனைவரும் அக்கறை கொண்டுள்ளனர் என்றார்.



No comments:
Post a Comment