Recent Posts

Search This Blog

பிரதேசத்தின் நீண்ட நாள் தேவையாக கருதப்பட்ட ஜனாசா வாகனம் பிரதேச மக்களின் உதவியில் அன்பளிப்பு செய்யப்பட்டது #பொலன்னறுவை - சுங்காவில்

Monday, 7 August 2023


 அஸ்ஸலாமு அலைக்கும்..

பொலன்னறுவை மாவட்டத்தின்  சுங்காவில் பிரதேசத்தின்  நீண்ட நாள் தேவையாக கருதப்பட்ட ஜனாசா வாகனம் ஒன்றினை சுங்காவில் முபீன் ஜூம்மா பள்ளிவாயலின் தலைவர் றியான் (ஸஹ்வி) யின் முன்னெடுப்பில் 05-08-2023 ம் திகதி சனிக்கிழமை  பி.ப. 5. மணியளவில் பொது மக்கள் பாவனைக்கு  Mubeen Janaza Vehicle Service என்ற அமைப்பிற்குக் கையளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்!


இந்நிகழ்வில் றியான் (ஸஹ்வி) அவர்களின் தலமையில் பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் கலாச்சாரத் திணைக்கள உத்தியோகத்தர் சகோதரர் A.  தஸ்லீம்  மற்றும் லங்காபுர ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் இர்ஷாத் நஹ்ஜி,  மற்றும் லங்காபுர  பொலிஸ் உத்தியோகத்தர் குசும் சிறி,  மற்றும்  அனைத்து  மாவட்ட அவசர ஜனாசா வாகன சேவை ஒருங்கிணைப்பாளர் காதர் ஆசிரியர் பள்ளிவாயல் தலைவர்கள் ஏனைய ஜனாசா சங்கத் தலைவர்கள் மத குருமார்கள் கலந்து சிறப்பித்தனர்.


முபீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாகத்தின் மேற்பார்வையில் பிரதேச மக்களினதும் முக்கியமாக வெளிநாட்டில் வாழ் சகோதரர்களின் பங்களிப்பில்  இந்த ஜனாசா வாகனம் கொள்வனவு செய்யப்பட்டது.


இந்த ஜனாசா வாகனம் பொலன்னறுவை சுங்காவில் கிராமம் மற்றும் அதனை அன்மித்த முஸ்லிம்,  சிங்கள கிராம மக்களின் ஜனாசாக்களை இலவசமாகக் கொண்டு வருவதற்கு  எந்தவித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது எனவும்  நன்கொடைகள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என முபீன் பள்ளிவாயல் தலைவர் றியான் (ஸஹ்வி) அவர்கள் தெரிவித்தார்.


இத்திட்டத்திற்கு அயராது உழைத்த  வெளிநாட்டில் உள்ளாட்டில் உள்ள சகோதரர்களை  கெளரவிக்கும் முகமாக Certificate, நினைவு சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் முபீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாக சபையினர் நன்றியைத் தெரிவித்தனர்.


இந்த ஜனாசா வாகனம் மூலம் பல சேவைகளை மக்களுக்குக்  கொண்டு செல்வதற்கு  Mubeen Janaza Vehicle Service என்ற அமைப்பின் தலைவர் சகோதரர் நசீம் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஜனாசா வாகனம் கையளிக்கப்பட்டது. 


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இவ் அமைப்பில் உள்ள இளைஞர்கள் மூலம் பிரதேச மக்கள் பயன் அடைவர்கள் என நம்புகின்றோம்.


தூர நோக்கு சிந்தனை உள்ள இளைஞர்கள்  அவர்களது பங்களிப்பும்  எமது கிராமத்திற்கு  அத்தியவசியமாகக் கருதப்பட்டு சிறந்ததொரு இளைஞர் சமூகம் உருவாகுவதற்கும் அவர்கள் மீது  அதீத நம்பிக்கை வைத்து அவர்களுக்கான களத்தினை முபீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாக சபை  அமைத்துக் கொடுத்துள்ளது. 

*முபீன் ஜூம்மா பள்ளிவாயல் நிருவாக சபை*









No comments:

Post a Comment