Recent Posts

Search This Blog

சஜித் பிரேமதாச எல்லாவற்றுக்கும் பயந்தவர் ; அமைச்சர் மனுஷ நாணயக்கார

Thursday, 3 August 2023


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேலை செய்ய பயம்கொண்டவர், பொறுப்புகளை ஏற்க முடியாதவர் என்பதை முழு நாட்டுக்கும் நிரூபித்து காட்டியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.



அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எங்களை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கியிருந்தார்கள். இந்நிலையில், எங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் இருந்த நிலைமைக்கமை யவே சஜித் பிரேமதாசவுடன் சென்றிருந்தோம். இறுதியில் சஜித் பிரேமதாச என்பவர் வேலை செய்ய முடியாதவர், வேலை செய்ய பயந்தவர், பொறுப்புகளை ஏற்க முடியாதவர் என்பதை முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தி விட்டார். இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.



எனவே, சகலரையும் ஒன்றிணைத்துக்கொண் டால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தற்போதுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அப்பால், மேலும் பலர் இணைந்துக்கொள்ள காத்திருக்கிறார்கள் என்றார்


No comments:

Post a Comment