Recent Posts

Search This Blog

கனேவல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் முகம்மத் அன்வர் உயிரிழப்பு.

Friday, 11 August 2023


மருதமுனையை பிறப்பிடமாகவும் கனேவல்பொல வில் திருமணமாகி இருந்த சகோதரர் #அன்வர் அவர்கள் வாகன விபத்தொன்றில் இறையடி எய்தியுள்ளார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

 இவர் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பேருந்து ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்ள வேண்டும்.

அவர்கள் அல் மீஸான் பவுண்டேஸன் என்ற பெயரில் பல சமூக நல திட்டங்களை பாடசாலை மட்டத்திலும், குறிப்பாக இன மத பாகுபாடின்றி கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு நலன்கள் சென்றடைய வேண்டுமென்பதில் குறியாக இருந்தவர்.

மருதமுனை மண்ணிலிருந்து கனேவல்பொல வந்து திருமணமாகி இருந்தாலும், அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த ஒரு மனிதர் போல் அன்பாகவும், பாசமாகவும் பழகியவர்.
எப்போதும் ஊர் நலனில் அக்கறை கொண்டவர்.
பிரயோசனமாக ஏதேனும் ஊரில் இடம்பெற வேண்டுமென்ற சிந்தனையை முழு மூச்சாக எடுத்து நின்றவர்.

அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, அவரது செயற்பாடுகளை அங்கீகரித்து, செல்லப்போகும் கப்ருடைய வாழ்விலே சுவர்க்கத்தின் வாடையை நுகர அருள்புரிவானாக.... ஆமீன்....

தகவல் : முகம்மத் ரிகாஸ்
ஆப்தீன் அமீர்கான்


No comments:

Post a Comment