Recent Posts

Search This Blog

நாடளாவிய ரீதியில் மழை வேண்டி, "ஸலாதுல் இஸ்திஸ்கா" தொழுகைகளை நடத்துவோம்.

Monday, 7 August 2023


*நாடளாவிய ரீதியில் மழை வேண்டும் "ஸலாதுல் இஸ்திஸ்கா" தொழுகைகளை நடத்துவோம்!*

நாட்டில் வரட்சி காரணமாக விவசாயிகள் பாரிய நெருக்கடியில் இருக்கின்றனர்.

நீர்தேக்கங்களில் நீர்மட்டம் அதிக அளவில் குறைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி கேள்விக்குறியாக உள்ளது.

முன்னுரிமை மின்சாரத்திற்கா விவசாயத்திற்கா என்ற இழுபறியில் நீர்தேக்கங்களில் இருந்து நீரை விடுவிப்பதில் இரண்டுமாதமாக நிலவிய இழுபறியில் பல்லாயிரக் கணக்காண ஏக்கர் பயிர் செய்கைகள் பாதிப் படைந்துள்ளன.

அதே வேளை நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை காரணமாகவும் மக்கள் அவதியுறுகின்றனர்.

இந்நிலையில் காலநடைகள் உட்பட ஏனைய உயிரினங்கள் விலங்குகள் தாவரங்கள் என சகலதும் பாதிப்புறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே நாடாளாவிய ரீதியில் *மழைநீர் அவசியப்படும் பிரதேசங்களில்* ஸலாதுல் இஸ்திஸ்கா மழை வேண்டும் தொழுகையை அவ்வப்பிரதேச மஸ்ஜிதுகள் உலமாக்கள் ஏற்பாடு செய்தல் அவசியமாகும்!

*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 07.08.2023


No comments:

Post a Comment