Recent Posts

Search This Blog

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் மோதல் – மோட்டார் சாகசம் நிகழ்த்தி இளைஞர்கள் அட்டகாசம்.

Thursday, 10 August 2023


மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி
ஊர்வலத்தின் போது ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் நிகழ்த்திய இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தையை குறித்த இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



நேற்று (07) பிற்பகல் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த, வாதுவ, தல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய துலாஞ்ச ஹேஷாமின் இறுதிக் கிரியைகள் நேற்று (09) பிற்பகல் வாதுவ வெரகம பொது மயானத்தில் இடம்பெற்றது.



சுமார் முப்பது மோட்டார் சைக்கிள்களுடன் அங்கு இளைஞர்கள் குழு ஒன்று இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாக கூறி ஒற்றை சக்கரத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தினர்.



பலர் அதை வெறுப்புடன் பார்த்தார்கள், ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அங்கிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



இதன்போது குறித்த நபரைகிட்டத்தட்ட 50 இளைஞர்கள் தங்கள் கைகளாலும், தலைக்கவசங்களினாலும் தாக்கியதாகவும், உள்ளூர் மக்கள் சிலர் பெரும் முயற்சியில் அவரைக் காப்பாற்றியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.



மூன்று பிள்ளைகளின் தந்தை சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில், உள்ளூர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த வாதுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



No comments:

Post a Comment