பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விழா 2019ம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கு பயன்படுத்தப்பட்ட மின்சார கட்டணமாக 26 இலட்சத்து 82,246 ரூபாய் 57 சதம் இன்னும் செலுத்தப்படவில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவாகே தெரிவித்துள்ளார்.
குறித்த மின்சார கட்டணம் தொடர்பாக தாம் இலங்கை மின்சார சபையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வினவி இருந்ததாகவும், இந்த கட்டணத்தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என்று தமக்கு நேற்று பதில் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, இந்த விடயத்தில் இலங்கை மின்சார சபை தமக்கு சரியான விளக்கத்தை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.





No comments:
Post a Comment