Recent Posts

Search This Blog

போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை வழங்க 25 மாவட்டங்களுக்கும் சைக்கிளில் பயணம் செய்யும் தில்லையடி நப்சான் இன்றுடன் 10வது நாளாக...

Thursday, 24 August 2023


 15.08.2023 - 24.08.2023 இன்றுடன் 10வது நாளாக " Say No To Drugs, Drive Safely & Visit Sri Lanka " என்ற மூன்று தொனிப்பொருட்களை சுமந்தவாறு முழு இலங்கைக்கும் { 25 மாவட்டங்கள் } இந்த விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கின்றார் எமது லகூன் அமைப்பின் உறுப்பினர், தில்லையடி சதாமியாபுரத்தை சேர்ந்த

L.A.M. Nafsan.


வெயில் மழை பாராமல், பகல் மற்றும் இரவு பாராமல் தனது இலக்கை நோக்கி பயணிக்கும் நம் புத்தளத்தின் சாதனையாளனுக்கு; அவருக்கான உடல் சுகத்தையும், பாதுகாப்பையும், அவரின் நோக்கம் வெற்றி பெறவும் நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.


L.A.M. Nafsan அவர்களை இலங்கை முழுவதும் வரவேற்று, அவருக்கான வாழ்த்துக்களையும், மரியாதைகளையும் செய்த அனைத்து சகோதரர்களுக்கும் இச்சமயத்தில் லகூன் அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.











No comments:

Post a Comment