Recent Posts

Search This Blog

CCTV காட்சி இணைப்பு : பயணிகளுடன் தலைகீழாக கவிழ்ந்த தனியார் பஸ் - பலர் காயம்

Saturday, 15 July 2023


தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று (15) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தின் 4 சக்கரங்களும் மேலே உள்ளவாறு கவிழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் இரண்டு அம்புலன்ஸ் வண்டிகளில் வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு - பதுளை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களில் 15 போ் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது பதிவான சி.சி.டி.வி வீடியோ வௌியாகியுள்ளது.



No comments:

Post a Comment