Recent Posts

Search This Blog

கார்னிவேல் நிகழ்வு, கந்தளாய் பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரை காவு கொண்டது.

Thursday, 20 July 2023


கந்தளாய் யூசுப்

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாத்தியகம பொது மைதானத்தில் நடைபெற்ற காணிவேல் ஒன்றில் பொலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் வாத்தியகம பகுதியைச் சேர்ந்த வயது 47 இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் ஜே.எம்.ஜனக சூரன் ஜீவ கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .

நேற்று (20) இரவு 11.30 மணியளவில் காணிவேல் நிகழ்வில் மேல் பலகையில் கடமையில் இருந்த போது சைக்கிள் ஓடும் கிணற்றின் மேல் பகுதியில் இருந்த பலகை உடைந்து கீழ விழுந்ததில் பலத்த காயங்களுடன் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணை கந்தளாய் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.




No comments:

Post a Comment