குவைத் நாட்டுக்கு அதிக இரத்த தானம் செய்த சமூகங்களுள் ஒன்றாக குவைத் வாழ் இலங்கை சமூகம் கௌரவிக்கப்பட்டது.
சர்வதேச இரத்த தான தினத்தை முன்னிட்டு குவைத் மத்திய இரத்த வங்கி குவைத் சுகாதார அமைச்சுடன் இணைந்து ஆண்டுதோறும் அதிக இரத்த தானம் செய்த சமூகங்கள், அமைப்புக்கள் மற்றும் தனி மனிதர்களை கௌரவித்து வருகிறது..
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வருடம் இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (IIC Kuwait), රට විරැවන්ගෙ එකමුතුව කුවේට් (KUCH), ஸெய்லானீஸ் உதவும் கரங்கள் (SHHK), மற்றும் குவைத் அவசர உதவி மையம் (KEHS) ஆகிய நான்கு அமைப்புக்களும் பல இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நான்கு அமைப்புகளதும் பங்களிப்புகளை கௌரவிக்கும் முகமாக இவ்வமைப்புகளது பங்களிப்புகளை ஒன்றிணைத்து குவைத் மக்களுக்காக அதிக இரத்தம் வழங்கிய நாடுகளின் வரிசையில் குவைத் மத்திய இரத்த வங்கி இலங்கைக்கு நான்காம் இடத்தை வழங்கி கௌரவித்துள்ளது.
இந்நிகழ்வில் குவைத் சுகாதார அமைச்சர் டாக்டர் அஹ்மத் அல்-அவழி உட்பட அமைச்சின் மற்றும் குவைத் மத்திய இரத்த வங்கியின் உயர் அதிகாரிகள், குவைத், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட்ட பல நாடுகளின் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். குவைத் மத்திய இரத்த வங்கி மூலம் குவைத் வாழ் இலங்கையர்கள் இவ்வாறு கௌரவிக்கப்படுவது இது இரண்டாம் தடவையாகும்.
இவ்வாறான மனித நேயப் பணிகள் நாடுகளுக்கிடையேயும், இனங்களுக்கிடையேயும் நல்லுறவை ஏற்படுத்தி சக வாழ்வை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது..
https://ift.tt/AiUklyI





No comments:
Post a Comment